டுவிட்டரில் இன்னைக்கும் ரஜினி தான் டாப் டிரெண்டிங்

Views:
 
Category: Entertainment
     
 

Presentation Description

வழக்கம் போல ரஜினிகாந்தின் இந்த பேட்டியும் ஏகத்துக்கும் வைரலாகி கொண்டிருக்கிறது. #RajiniWithIndianMuslims என்ற ஹேஷ்டேக்கை டிரெண்டிங்கில் விட்டு குஷியாகி இருக்கின்றனர் ரசிகர்கள்.

Comments

Presentation Transcript

Tamil News Online டுவிட்டரில் இன்னைக்கும் ரஜினி தான் டாப் டிரெண்டிங்…! அடிச்சு தூக்கும் ரசிகர்கள் :

Tamil News Online டுவிட்டரில் இன்னைக்கும் ரஜினி தான் டாப் டிரெண்டிங்…! அடிச்சு தூக்கும் ரசிகர்கள்

Slide2:

சென்னை:  வழக்கம் போல ரஜினிகாந்தின் இந்த பேட்டியும் ஏகத்துக்கும் வைரலாகி கொண்டிருக்கிறது. # RajiniWithIndianMuslims என்ற ஹேஷ்டேக்கை டிரெண்டிங்கில் விட்டு குஷியாகி இருக்கின்றனர் ரசிகர்கள் . ஏதாவது பேசினால்… அது சர்ச்சையாகி பூமராங்காக திரும்பி தாக்கி விடும். ரஜினியின் பேட்டியில் இது வழக்கமானது தான். அந்த வழக்கமான ஒன்று தான் இன்றைக்கும் நடந்திருக்கிறது . போயஸ் கார்டன் வாசலில் மீடியாக்களை சந்தித்தார் ரஜினி . சிஏஏ, என்ஆர்சி, என்பிஆர் என்று சகல கேள்விகளையும் சாமர்த்தியமாக எதிர்கொண்டு பதில்களை கூறி இருக்கிறார்.

Slide3:

சிஏஏ அவசியம், என்பிஆர் முக்கியம், இஸ்லாமியர்களுக்கு ஒன்று என்றால் முதல் ஆளாக ரஜினிகாந்தாகிய நானே குரல் கொடுப்பேன் என்று முழக்கமிட்டு இருக்கிறார். எதை பற்றியும் புரிதல் இல்லாமல் அவர் பேசி இருக்கிறார் என்று வழக்கம் போல இணையத்தில் எதிர்க்கருத்துகள் குவிந்து வருகின்றன . இதையடுத்து, ரஜினிக்கு ஆதரவாக பலரும் களத்தில் குதித்து இருக்கின்றனர். அவர் பேட்டியளித்த 30 நிமிடங்களுக்குள் # RajiniWithIndianMuslims என்ற ஹேஷ்டேக் வைரலாகி விட்டது. தலைவரின் வார்த்தைகளுக்கு பின்னால் நாங்கள் இருக்கும் என்று போட்டு தாக்கிவிட்டனர்.

Slide4:

மக்களுக்கான உண்மையான தலைவர், தமிழகத்தில் இருந்து உருவாகி வரும் புதிய தலைவர் ரஜினிகாந்த் என்று மற்றொரு ரசிகர் பதிவிட்டு உள்ளார் . நீங்க கெத்து சார் என்று ஒருவர் பதிவிட்டுள்ளார். நீங்க சரியானதை தான் பேசுவீங்க தலைவா..! மாணவர்களுக்கு இதுபோன்று ஒரு அறிவுரையை நீங்கள் பார்க்க முடியாது. எம்மதமும், சம்மதம், ஆன்மீக அரசியல் என்று டுவிட்டி உள்ளனர்.

Slide5:

அதே நேரத்தில் அவருக்கு எதிராக கருத்துகள் பதிவிடப்பட்டு உள்ளன. தம்பி இன்னும் நோட்டீஸ் வரல என்று ஒருவர் பதிவிட்டு உள்ளார். அடக்கடவுளே… 11வது நாளாக இந்த நடிகர் இன்னும் டிரெண்டிங்கில் இருக்கிறோரே என்று மற்றொருவர் ஆச்சரியம் அடைந்துள்ளார். தொடர்ந்து ரஜினிக்கு ஆதரவாக வெளியாகும் கருத்துகள் அதிக அளவு இடம் பெற்று வருகின்றன . மேலும் படிக்க Tamil Cinema News தமிழக செய்திகளுக்கு : Tamil News Headlines Main Page செல்ல : Tamil News Online

Slide6:

Thanks for Reading

authorStream Live Help