Sathish Love Poem

Views:
 
Category: Entertainment
     
 

Presentation Description

No description available.

Comments

Presentation Transcript

நீயின்றி ஒரு வாழ்க்கை பயணம்:

நீயின்றி ஒரு வாழ்க்கை பயணம்

PowerPoint Presentation:

அமைதியாய் ஓடிக் கொண்டிருந்த வாழ்க்கை.. என் வாழ்வில் நானும் என்னுடன் என் நிழலுமென்று

PowerPoint Presentation:

பார்ப்பதை எல்லாம் ரசிப்பேன் ரசிப்பதையெல்லாம் என் மனதில் பதிந்து வைத்துக்கொள்வேன் என் கவிக்கு உதவுமென்று..

PowerPoint Presentation:

அன்றும் அப்படி தான் உன்னை பார்த்து, ரசித்து வியந்ததில் .. முதலில் என் கவிதையெல்லாம் உணதாகிப் போனது. பின் என்னையும் உனதாக்கி கொண்டாய் அது வேறு கதை.

PowerPoint Presentation:

என் காதலுக்கு முதல் வடிவம் தந்தது இக்கவிதை தான் அவைகளில் தான் நீ வாழ்கிறாய் காதலென்றால் எப்படி இருக்குமென்று கேட்டால்

PowerPoint Presentation:

ஒரு வரியில் சொல்வேன். என் கவிதை உருவில் . . நீயென்று !!

PowerPoint Presentation:

நீ யாரென்று தெரியாது.. நீ எப்படியென்று அறியேன்.. நீ எனக்கானவள் என்று மட்டும் நினைப்பேன் உனக்காக மட்டும் வாழ்கிறேன்..

PowerPoint Presentation:

நீயின்றி அமையாது என் உலகு உன் துணையின்றி கிடையாது என் வாழ்க்கை யாருக்கும் புரியாது என் அறியா காதல்

PowerPoint Presentation:

அது ஒரு குழந்தை உன்னை பார்த்தல் சிரிக்கும் உன்னை பார்க்காத போது உன்னையே நினைத்து அழும் ஆறுதலுக்கு உன்னை தேடும் உன் தோல் சாய்ந்துகொள்ள..

PowerPoint Presentation:

சத்தமின்றி சலனப்பட்டுகொள்ளும் இதயம் மட்டும் உள்ளுக்குள் சமாதனம் சொல்லிக்கொள்வேன் எனக்கு நானே என்னவென்று கேட்கிறாயா ?

PowerPoint Presentation:

நீ என்னவள் இல்லை என்பதை சொல்லி சொல்லியே புரியவைப்பதாய் நினைப்பேன் ஆனால் மீண்டும் ஒரு குழந்தையாய் அழும்.. எனக்கும் புரியாமல் ..

PowerPoint Presentation:

இவ்வழக்கம் என் வாழ்க்கையோடு ஒன்றிப்போனது . அதை விடு உனக்கு ஏதோ சொல்ல வந்து .. அதை மறந்து என் சோகத்தை சொல்லிக் கொண்டிருக்கிறேன்

PowerPoint Presentation:

யாரையோ நம்பி உன் மனதை தருகிறாய் என்னையே உனக்காக இழக்கிறேன் என்கிறேன் தர மறுக்கிறாய்

PowerPoint Presentation:

நீ கேட்காமலே நானும் கொடுக்காமலே.. என் மனம் மட்டும் உன்னடி எப்படி சேர்ந்தது என்பதில் எனக்கும் வியப்பே..

PowerPoint Presentation:

அதை மட்டும் காயப்படுத்தாமல் என்னிடமே தந்துவிடு. எனக்கு சொந்தமில்லாத உன்னிடம் என் இதயம் இருப்பதில் எனக்கு துளியும் விருப்பமில்லை..

PowerPoint Presentation:

இத்தனை நாளாய் … நான் தொலைத்த நாழிகை முழுதும் உனக்காக தான் என என்னும் போது.. கடிகார ஓசை ஒலித்தது உண்மையென..

PowerPoint Presentation:

யாருக்கும் பாரமாக இருக்க விரும்பவில்லை என்று என்னை பிரிந்து சென்றாய்.. உன் நினைவுகள் என்னும் பெரும் சுமையை என் மீது சுமத்தி..

PowerPoint Presentation:

போதும் பெண்ணே.. விடிகிற விடியல் எனதாகட்டும் ஒரு புது வாழ்க்கை தொடங்கட்டுமே நீயின்றி நான் வாழ்வேன் உன் நினைவிருக்க எனக்கு ஐயமில்லை

PowerPoint Presentation:

இது என் காதலின் இரண்டாம் பாகம் .. என் கவி பயணம் தொடரும் நீயில்லா என் வாழ்க்கையில்.

அன்புடன் சதிஷ்.S:

அன்புடன் சதிஷ் .S

authorStream Live Help