Prevention from heat waves

Views:
 
Category: Education
     
 

Presentation Description

describing in Tamil about those who are at increasing risk to develop health problems from heat exposure and prevention strategies including first aid measures

Comments

Presentation Transcript

Let us protect ourselves from Heat wave வெப்பக் கதிர்களின் தாக்கத்தில்  இருந்து எம்மை பாதுகாப்போம் :

Let us protect ourselves from Heat wave வெப்பக் கதிர்களின் தாக்கத்தில்  இருந்து எம்மை பாதுகாப்போம்   Dr. Murali Vallipuranathan MBBS, PGD (Population Studies), MSc, MD (Community Medicine), FCCP Consultant Community Physician சமுதாய மருத்துவ நிபுணர் April 2016  

அதிகரித்து வரும் உலக வெப்பநிலை மனித உயிர்களுக்கு ஆபத்தை விளைவிக்க வல்லது :

அதிகரித்து வரும் உலக வெப்பநிலை மனித உயிர்களுக்கு ஆபத்தை விளைவிக்க வல்லது  இந்த வருடம் முதல் 3 மாத காலத்தில் பல நூற்றுக் கணக்கானோர் வெப்ப அலைத் தாக்கத்தினால் இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் உயிர் இழந்தனர்  இலங்கையில் இது வரை 3 உயிர் இழப்புகள் ஏற்பட்டு இருப்பதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன . உலக வெப்பநிலை அதிகரித்துச் செல்வதனால் எதிர்காலத்தில் இலங்கையிலும் வெப்பத் தாக்கம் காரணமாக பாதிக்கப் படக் கூடிய அபாயம் அதிகரிக்கும் 

Slide3:

வெப்பத்தினால் ஏற்படும் நோய்  : உடலானது தன்னை குளிரூட்ட முடியாது போய்விட்ட நிலையில் உடல் மிகைவெப்பம் அடைவதனால் ஏற்படுகிறது  ஊறு , ஊனம் அல்லது இறப்புக்கு வழிவகுக்கலாம்  தடுக்கப்படக் கூடியது  NASA வெளிப்புற வெப்பத் தாக்கத்துக்கு உள்ளாவதை அறிந்து கொள்வது ஏன் முக்கியமானது ? வெப்பமான காலநிலை உளத்திலும் உடலிலும் சோர்வை ஏற்படுத்தும்  வேலைதலங்களிலும் பாடசாலைகளிலும் மேலதிக கவனம் எடுப்பது அவசியம்  வெப்பத் தாக்கத்துக்கு உள்ளாவது உடல்நலக் குறைவை ஏற்படுத்தலாம் 

வெப்பத்தினால் ஏற்படும் நோய் எங்கே நிகழும் ?:

வெப்பத்தினால் ஏற்படும் நோய் எங்கே நிகழும் ? வெப்பத் தாக்க உடல்நலக் குறைவு எவருக்கும் ஏற்படலாம்  வெய்யிலின் மத்தியில் கடின வேலைகளை செய்யும் ஊழியர்கள் மற்றும் உடற்பயிற்சியில் ஈடுபடும் மாணவர்கள் அதிக பாதிப்புக்கு உள்ளாகும் அபாயத்தில் இருக்கிறார்கள்  

:

வெப்பத்தினால் ஏற்படும் நோய் ஆபத்தை அதிகரிக்கும் காரணிகள்  

வெளிப்புற வெப்பத் தாக்கத்துக்கு உள்ளாகும் அபாயத்தில் நீங்கள் இருக்கிறீர்களா ?:

வெளிப்புற வெப்பத் தாக்கத்துக்கு உள்ளாகும் அபாயத்தில் நீங்கள் இருக்கிறீர்களா ? சூழல் காரணிகள்  உடல் செயற்பாடுகள்  ஆடையும் பாதுகாப்பு உபகரணங்களும்  தனிப்பட்ட ஆபத்துக் காரணிகள் 

சூழல் காரணிகள் :

சூழல் காரணிகள்  நேரடி வெய்யில், வெப்பம் மற்றும் ஈரப்பதன்  நேரடி வெய்யிலின் கீழே வேலை செய்வோர் அதிக ஆபத்தில் இருக்கிறார்கள்  காற்றோட்டம்  காற்றோட்டம்  அற்ற அல்லது குறைந்த இடத்தில் வேலை செய்யும் போது அபாயம் அதிகரிக்கிறது 

சூழல் காரணிகள்:

சூழல் காரணிகள் வெப்பமான உபகரணங்கள்   இயந்திரங்கள் மேலும் வெப்பத்தை அதிகரிக்கும்  நிலத்தில் இருந்தும் ஏனைய பொருட்களில் இருந்தும் தெறிக்கும் வெப்பம்  தெறிக்கும் வெப்பத்தையிட்டு அவதானமாயிருக்க வேண்டும் 

சூழல் காரணிகள்:

சூழல் காரணிகள் உடல் செயற்பாடுகள்  எந்த வகையான வேலையை செய்கிறோம் ? எவ்வளவு கடுமையாக வேலை செய்கிறோம் ?

ஆடைகளும் தனிநபர் பாதுகாப்பு உபகரணங்களும் :

ஆடைகளும் தனிநபர் பாதுகாப்பு உபகரணங்களும்  பாரமான ஆடைகள்  பல அடுக்குகளைக் கொண்ட ஆடைகள் இருண்ட நிறமான ஆடைகள்   பாதுகாப்பு ஆடைகள் ஆவியாதலை  தடுக்கும் ஆடைகள்  இரசாயன எதிர்ப்பு ஆடைகள்  சுவாசப் பாதுகாப்பு 

Slide11:

வெப்பத்தினால் ஏற்படக்கூடிய பாதிப்பை அதிகரிக்கக் கூடிய தனிப்பட்ட காரணிகள் 

தனிப்பட்ட ஆபத்துக் காரணிகள் :

தனிப்பட்ட ஆபத்துக் காரணிகள்  உடல் வறட்சி நிலை  போதுமான அளவு தண்ணீரைக் குடிக்கத் தவறுவது உடல் வறட்சி நிலைக்கு இட்டுச் செல்லும்  மின் அயனிகளின் இழப்பு   வியர்க்கும் போது வியர்வையில் சோடியம் குளோரின் போன்ற மின் அயனிகள் இழக்கப் படுகின்றன  உடல் சீராக இயங்குவதற்கு மின் அயனிகள் அவசியமானவை  காய்ச்சல் / நோய் வாய்ப்பட்டு இருத்தல் 

தனிப்பட்ட ஆபத்துக் காரணிகள்:

தனிப்பட்ட ஆபத்துக் காரணிகள் வயது, நிறை மற்றும் உடல் தகுதி ( fitness) கடந்த காலத்தில் வெப்பத் தாக்கத்தினால் நோய் வாய்ப்பட்டு இருத்தல்  மருத்துவ நிலைகள் இருதய நோய்  நீரிழிவு சில வகையான மருந்துகள் 

சில மருந்துகள் உங்களுடைய உடலில் வெப்பத்தின் தாக்கத்தினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை அதிகரிக்கலாம் :

சில மருந்துகள் உங்களுடைய உடலில் வெப்பத்தின் தாக்கத்தினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை அதிகரிக்கலாம்   ஒவ்வாமைக்கு பயன்படுத்தும் மருந்துகள்  காய்ச்சல் இருமல் மருந்துகள்  குருதி அமுக்க இருதய நோய் மருந்துகள்  தூண்டப்பட்ட குடல் மற்றும் சிறுநீர்ப் பை நோய்களுக்கு பயன்படும் மருந்துகள்  மலச் சிக்கல் மருந்துகள்  மன நோய் மருந்துகள் வலிப்பு நோய் மருந்துகள்  தைரொயிட் மருந்துகள்  உடலில் இருந்து நீரை வெளியேற்றும் மருந்துகள்  இது தொடர்பான சந்தேகங்களை வைத்தியரிடம் அல்லது மருந்தாளரிடம் தெளிவாக்க முடியும் 

தனிப்பட்ட ஆபத்துக் காரணிகள்:

தனிப்பட்ட ஆபத்துக் காரணிகள் உணவு  சீனி சேர்க்கப்பட்ட பானங்கள்  கலோரி அதிகமான உணவுகள்  மதுபானம்  

:

“ நான் பலமானவன் - எனக்கு தண்ணீர் குடிக்க இடைவேளை தேவை இல்லை ”   “ எனக்குத் தாகம் இல்லை - நான் தண்ணீர் குடிக்கத் தேவை இல்லை  ” “ தண்ணீர் குடிப்பதற்கு இடைவேளை எடுத்தால் எனது ஊதியம் குறைந்து விடும் ” “ தண்ணீர் குடிக்கப் போவது எனது அணியைக் கைவிடுவது ஆகும் ” “ நான் இங்கே புதியவன் - என்னை நிரூபிக்க வேண்டும்    ” இத்தகைய தவறான நம்பிக்கைகள் ஆபத்தை ஏற்படுத்தும். தனிப்பட்ட ஆபத்துக் காரணிகள் – எமது உளப்பாங்கு 

வெப்பத்தின் மத்தியில் வேலை செய்வதற்குரிய உதவிக் குறிப்புகள்  :

வெப்பத்தின் மத்தியில் வேலை செய்வதற்குரிய உதவிக் குறிப்புகள்  சக ஊழியர்களின் மீது வெப்பத் தாக்கத்தின் அறிகுறிகள் பற்றி அவதானமாக இருத்தல்   வேலையில் இடைவேளைகளை அதிகரிக்க வேண்டிய தருணங்கள்   : மிகவும் வெப்பமான சூழல்  கடுமையான உடல் உழைப்பு  பாதுகாப்பு ஆடைகள் தோலில் வியர்வை ஆவியாகி குளிர்வதை தடுக்கிறது   சாத்தியமான வேளைகளில் மாறி மாறி இலகுவான வேலையும் கடினமான வேலையும்   சாத்தியமான வேளைகளில் கடினமான வேலைகளை வெப்பம் குறைந்த காலை அல்லது மாலை வேளைகளில் செய்வது  

வெப்பத்தின் மத்தியில் வேலை செய்வதற்குரிய உதவிக் குறிப்புகள்:

வெப்பத்தின் மத்தியில் வேலை செய்வதற்குரிய உதவிக் குறிப்புகள் பொருத்தமான உடைகளை அணிந்து கொள்ள வேண்டும்   மெல்லிய நிறமான  நிறை குறைந்த  இயற்கை நார்களினால் ஆன  விளிம்புடன் கூடிய தொப்பி  இயன்ற அளவுக்கு நிழலில் அல்லது நேரடி சூரிய வெப்பம் தாக்காத வண்ணம் வேலை செய்வது  சூரியன் தோலை சுட்டெரிப்பதை தவிர்த்துக் கொள்ள வேண்டும்  

இயன்ற அளவுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் மேலதிக ஆடைகளை இடைவேளை நேரங்களில் கழற்றுங்கள் :

இயன்ற அளவுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் மேலதிக ஆடைகளை இடைவேளை நேரங்களில் கழற்றுங்கள்  This is important to help you stay cool

:

தண்ணீர்  வெப்பமான நாளில் நாள் பூராகவும் சிறிது சிறிதாக தண்ணீரை குடித்துக் கொண்டிருக்க  வேண்டியது அவசியம்  மிகவும் வெப்பமான சூழலில் வேலை செய்யும்போது அதிகளவில் வியர்ப்பதால் 1 மணி நேரத்தில் 1 லிட்டர் தண்ணீருக்கு மேல் குடிக்க வேண்டி இருக்கலாம்  நிர்வாகம் வேலைதலங்களிலும் பாடசாலைகளிலும் தண்ணீர் அருந்துவதை ஊக்குவிப்பதற்கு பொறுப்பாளிகள் ஆவர்  ஊழியர்களும் மாணவர்களும் தங்களுடைய தனிப்பட்ட ஆபத்துக் காரணிகளுக்கு உரிய பாதுகாப்பு நடவடிக்கை எடுப்பதற்கும் தேவையான அளவு தண்ணீரை அருந்தி உடலின் நீர்த் தன்மையை பேணுவதற்கும்  பொறுப்பாளி ஆவர் 

உரிய அளவு நீர்த் தன்மையை உடலில் ஏற்றிக் கொள்வதே வெப்பத்தினால் ஏற்படக் கூடிய நோயில் இருந்து எம்மைப் பாதுகாக்கும் உபாயம் ஆகும் :

உரிய அளவு நீர்த் தன்மையை உடலில் ஏற்றிக் கொள்வதே வெப்பத்தினால் ஏற்படக் கூடிய நோயில் இருந்து எம்மைப் பாதுகாக்கும் உபாயம் ஆகும்  செய்ய வேண்டியவை  நிறைய தண்ணீரை அருந்த வேண்டும்  உடலில் நீர்த் தன்மை நன்றாக இருக்கும் நிலையில் வேலையை தொடங்க வேண்டும்  கடுமையாக வியர்க்கும் போது மின் அயனிகளும் இழக்கப் படுவதனால் இளநீர் அல்லது தேசிக்காய் ரசத்தில் சிறிதளவு உப்பைக் கலந்து அருந்துவது நல்லது  தவிர்க்க வேண்டியவை   சோடா மற்றும் இனிப்புப் பானங்கள்  கோப்பி மற்றும் தேநீர்  மதுபானம்  நிறைய தாகம் ஏற்படும்வரை நீர் அருந்தாமல் இருத்தல்  

குடிநீர் மூலங்களை அருகாமையில் வைத்து இருக்க வேண்டும் :

பாதுகாப்பான மூடக்கூடிய நீர்க் குழாய்  தெளிவாக அடையாளம் இடப்பட்டது  குளிர்ந்த நீர் (60 F அல்லது 15 C   க்கு குறைவானது ). குளிர்ந்த நீரைப் பருகுவது  சுகநலக் கேட்டை ஏற்படுத்தும் என்று பொய்யான தகவல்களை பரப்பும் இணையத் தளங்களை நம்ப வேண்டாம்  தனிநபருக்கான அல்லது ஒற்றைப் பயன்பாட்டுக்குரிய கிண்ணங்களை பயன்படுத்துதல்  மாற்றுத் தெரிவுகள் :   தண்ணீர்ப் போத்தல்கள் வெப்பநிலையை பேணக்கூடிய குளிர்நீர் போத்தல்களை மாணவர்களும் ஊழியர்களும் தம்முடன் வைத்து இருப்பது நல்லது  குடிநீர் மூலங்களை அருகாமையில் வைத்து இருக்க வேண்டும் 

புதிய தட்பவெப்ப நிலைக்கு உடலைப்  பழக்கிக் கொள்ளுதல்:

புதிய தட்பவெப்ப நிலைக்கு உடலைப்  பழக்கிக் கொள்ளுதல் வெப்பத்தின் மத்தியில் வேலை செய்யும் அனுபவம் அற்றவர்களின் உடலானது வெப்பமான சூழ்நிலையில் வேலை செய்வதற்கு பழகிக் கொள்ள சில நாட்கள் பிடிக்கும்   அனுபவம் அற்றவர்கள் ஆரம்பத்தில் ஒவ்வொரு நாளும் சிறிது சிறிதாக வெப்பத்தின் மத்தியில் வேலை செய்யும் நேரத்தை அதிகரித்து உடல் அதை அனுசரிப்பதற்கு காலம் அளிக்க வேண்டும்  வெப்பநிலை அதிகமான வடக்கு கிழக்குப் பகுதியிலே தொடர்ந்து வசிப்பவர்கள் உஷ்ணமான சுவாத்தியத்திலும் வேலை செய்யக் கூடியவர்களாக இருக்கிறார்கள்  குளிரான வெளிநாடுகளில் இருந்துவிட்டு வருபவர்களும் நுவரெலியா போன்ற குளிர்ப் பிரதேசங்களில் இருந்து வருபவர்களும் அவர்களுடைய உடலானது வெப்பத்துக்கு பழக காலமெடுக்கும் என்பதனால் சடுதியாக முதல் நாளே வெப்பத்தின் மத்தியில் நீண்ட நேரம் வேலை செய்வதை தவிர்த்துக் கொள்ள வேண்டும் 

விசேட கவனம் செலுத்தப்பட வேண்டியவர்கள்::

விசேட கவனம் செலுத்தப்பட வேண்டியவர்கள் :  புதிதாக வேலைக்கு சேர்ந்தவர்கள் வருத்தம் குணமடைந்து உடனடியாக வேலைக்கு வந்தவர்கள்  2 வாரமாக வேலைக்கு வராமல் இருந்தவர்கள்  குளிர் பிரதேசங்களில் இருந்து வந்தவர்கள்  சடுதியாக சூழல் வெப்பம் அதிகரிக்கும் வெப்ப அலைத் தாக்க காலத்தில் அனைவரும் 

வெப்பத்தினால் ஏற்படக் கூடிய உடல்நலப் பாதிப்பு வகைகள் :

வெப்பத்தினால் ஏற்படக் கூடிய உடல்நலப் பாதிப்பு வகைகள்  வெப்பத்தினால் ஏற்படும் பாதிப்புகளை 5 பிரதான வகைகளாக பிரிக்கலாம் : வெகிர்ப்பரு - பெரும்பாலும் ஆடைகளின் உள்புறமாக ஏற்படும் . வெப்பத் தசைப் பிடிப்புகள்- கைகளிலும் கால்களிலும் உடல் வேலை செய்யும் போது ஏற்படுகிறது. வியர்வையினால் மின்னயனிகள் இழக்கப் படுவதே இதற்குக் காரணம் ஆகும் .   மயங்கி விழுதல் - வெப்பச் சூழலுக்கு பரிச்சயம் இல்லாதவர்களுக்கு ஏற்படலாம் . வெப்பச் சோர்வு - மேலும் கடுமையான தாக்கம் .   வெப்பத் தாக்கு நிலை - உயிராபத்து ஏற்படலாம் 

Slide26:

உடல் வறட்சி நிலை   வெப்பச் சோர்வு நிலை வெப்பத் தாக்கு நிலை வெப்பத்தினால் ஏற்படக்கூடிய மிகவும் அபாயகரமான பாதிப்புகள் எவை  ? சிகிச்சை அளிக்காத வெப்பச் சோர்வு நிலை வெப்பத் தாக்குநிலையாக மோசமடையக் கூடும் இரண்டு நிலைகளும் அவற்றின் அறிகுறிகளும் பாரதூரமானதாக கருதப் படவேண்டும்  குறிப்பு: வெப்பச் சோர்வு நிலையோ அல்லது வெப்பத் தாக்கு நிலையோ சடுதியாக ஏற்படாமல் சில நாட்களின் பின்னரும் உருவாகக் கூடும்  வெப்பச் சோர்வு நிலையும் வெப்பத் தாக்கு நிலையும்  

வெப்பப் பாதிப்பினால் ஏற்பட்ட நோய்நிலை: அறிகுறிகளும் எடுக்க வேண்டிய நடவடிக்கைகளும் :

வெப்பப் பாதிப்பினால் ஏற்பட்ட நோய்நிலை: அறிகுறிகளும் எடுக்க வேண்டிய நடவடிக்கைகளும்   நோய்நிலை   அறிகுறிகள்  பதில் நடவடிக்கைகள்  வெகிர்ப்பரு செந்நிறக் கொப்புளங்கள் சொறிவு (ஊசியால் குத்துவது போன்ற உணர்வு ) குளிரான இடத்தில் ஓய்வெடுக்க விடவேண்டும் குளிர் நீர்க் குளிப்பு  கொப்புளங்களை சொறியாமல் இருப்பதற்குரிய மருந்துகளை பூசுதல்  தோலில் நோய்க் கிருமிகளின் தாக்கம் ஏற்படாத வண்ணம் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்  வெப்பத் தசைப் பிடிப்புகள் வலியுடன் கூடிய தசைப் பிடிப்புகள்  அசாதாரண உடல் இருக்கை நிலை  பாதிக்கப்பட்ட தசைப் பகுதியை கையினால் பிடித்துக் கொண்டிருத்தல் குளிரான இடத்தில் ஓய்வெடுக்க விடவேண்டும் தண்ணீர் மற்றும் மின் அயனிகளைக் கொண்ட இளநீர் , தேசிக்காய் ரசம் போன்றவற்றை அருந்துவது பயன் தரும்  தசைப் பிடிப்பு அதிக வலி கொண்டதாக அல்லது தணியாமல் இருந்தால் மருத்துவரின் ஆலோசனையை பெறவேண்டும்  

வெப்பச் சோர்வு நிலையின் அறிகுறிகள் :

வெப்பச் சோர்வு நிலையின் அறிகுறிகள்   நோய்நிலை   அறிகுறிகள்  வெப்பச் சோர்வு தலையிடி தலைச்சுத்து மற்றும் மயக்கம்  பலவீனம்  மனநிலை மாற்றம்: கோபமும் குழப்பமும்  வயிற்று வலி மற்றும் வாந்தி  கடுமையாக வியர்த்தல்  கடும் நிறமாக சிறிதளவு சிறுநீர் கழித்தல்  வெளிறிய ஈரலிப்பான தோல் 

வெப்பச் சோர்வு நிலையினால் பாதிக்கப் பட்டவரை காப்பாற்றுவதற்கு எடுக்கப்பட வேண்டிய முதலுதவி நடவடிக்கைகள்  :

வெப்பச் சோர்வு நிலையினால் பாதிக்கப் பட்டவரை காப்பாற்றுவதற்கு எடுக்கப்பட வேண்டிய முதலுதவி   நடவடிக்கைகள்   பாதிக்கப்பட்டவரை குளிரான நிழலான இடத்துக்கு நகர்த்த வேண்டும். பாதிக்கப்பட்டவரை தனியாக விட வேண்டாம். அவருக்கு தலைச் சுத்து அல்லது மயக்கம் வருவது போல் இருந்தால் அவரை முதுகு கீழ்புறமாக கிடையாக கிடத்தி கால்களை 6-8 அங்குலத்துக்கு உயர்த்தி விடவும். வயிற்றுவலி வாந்தி போன்ற அறிகுறிகள் காணப்பட்டால் பக்கவாட்டில் கிடத்தவும்.  ஆடைகளை இயலுமானவரை தளர்த்தி இறுக்கமானவற்றை கழற்றி விடவும்   வயிற்றுக் குத்து வாந்தி போன்ற பிரச்சினைகள் இல்லாவிட்டால் குளிர்ந்த நீரை 15 நிமிடத்துக்கு ஒரு தடவை கிண்ணத்தில் அருந்தக் கொடுக்கவும்   காற்றாடி அல்லது விசிறுவதன் மூலமாக பாதிக்கப் பட்டவரை குளிரூட்ட முயற்சி எடுக்க வேண்டும். குளிர்ந்த நீரை விசிறுவது அல்லது ஈரச் சீலையால் துடைப்பதன் மூலம் தோலை குளிரூட்ட வேண்டும்  சில நிமிடங்களுக்குள் பாதிக்கப்பட்டவரின் நிலையில் முன்னேற்றம் ஏற்படாவிட்டால் அவசர உதவியைப் பெற்று நோயாளியை வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லவேண்டும்   வெப்பச் சோர்வு நிலைக்கு சரியாக சிகிச்சை அளிக்காவிட்டால் வருத்தநிலை அதிகரித்து உயிராபத்தை ஏற்படுத்தும் வெப்பத் தாக்கு நிலையாக மாறலாம்  

வெப்பத் தாக்கு நிலையின் அறிகுறிகள் :

வெப்பத் தாக்கு நிலையின் அறிகுறிகள்   நோய்நிலை அறிகுறிகள்  வெப்பத் தாக்கு காய்ந்த வெளிறிய தோல்  சிலவேளைகளில் வியர்த்துக் கொண்டு இருக்கலாம்  வாந்தியும் குமட்டுதலும்  சூடான சிவந்த தோல்  மனநிலை மற்றம்; கோபம், குழப்பம் அர்த்தம் இல்லாத செயற்பாடுகள்  வலிப்பு  அறிவிழந்து விழுதல்  அதிக உடல் வெப்பநிலை (104 F அல்லது 40 C )

வெப்பத்  தாக்கு  நிலைக்கு உள்ளனவரை காப்பாற்றுவதற்கு எடுக்கப்பட வேண்டிய முதலுதவி நடவடிக்கைகள் : ஒரு மருத்துவ அவசர நிலை :

வெப்பத்  தாக்கு  நிலைக்கு உள்ளனவரை காப்பாற்றுவதற்கு எடுக்கப்பட வேண்டிய முதலுதவி நடவடிக்கைகள் : ஒரு மருத்துவ அவசர நிலை  அவசர உதவியை பெற்று ஆம்புலன்ஸ் அல்லது வேறு வாகனத்தில் விரைவாக வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லவேண்டும்  பாதிக்கப்பட்டவரை குளிரான நிழலான இடத்துக்கு நகர்த்த வேண்டும். பாதிக்கப்பட்டவரை தனியாக விட வேண்டாம். அவரை முதுகு கீழ்புறமாக கிடையாக கிடத்தி வலிப்பு ஏற்பட்டு இருந்தால் அவருக்கு அண்மையில் உள்ள பொருட்களில் அடிபட்டு காயம் ஏற்படாமல் இருக்க அவற்றை அகற்றி விடவும் .  வயிற்றுவலி வாந்தி போன்ற அறிகுறிகள் காணப்பட்டால் பக்கவாட்டில் கிடத்தவும்.  பாரமான மற்றும் வெளி உடுப்புகளை கழற்றி விடவும்  வயிற்றுக் கோளாறு ஒன்றும் இல்லாமலும் தண்ணீர் குடிக்கும் அளவுக்கு சுயநினைவு இருந்தாலும் குடிப்பதற்கு குளிர்ந்த நீரை சிறிய அளவில் இடைக்கிடை கொடுக்கவும்  காற்றாடி அல்லது விசிறுவதன் மூலமாக பாதிக்கப் பட்டவரை குளிரூட்ட முயற்சி எடுக்க வேண்டும். குளிர்ந்த நீரை விசிறுவது அல்லது ஈரச் சீலையால் துடைப்பதன் மூலம் தோலை குளிரூட்ட வேண்டும் ஐஸ் கட்டிகள் கிடைக்கக் கூடியதாக இருந்தால்  ஐஸ் பாக்கெட்களை கமக்கட்டு மற்றும் அரைப் பகுதியில் வைக்கவும் 

Slide32:

வெப்பச் சோர்வு நிலையா அல்லது வெப்பத் தாக்கு நிலையா ?  அனைத்து வெப்பத் தாக்குக்கு உள்ளானவர்களிடமும் காணப்படும் தன்னிலை இழந்த அல்லது உணர்விழந்த நிலையே வேறுபாட்டை வெளிப்படுத்தும்   நீங்கள் 3 கேள்விகளைக் கேட்கலாம் 1. உங்களுடைய பெயர் என்ன ? 2. இன்று எத்தனையாம் திகதி ? 3. நாங்கள் எங்கே இருக்கிறோம் ? பாதிக்கப் பட்டவர் இந்தக் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாவிட்டால் அவர் வெப்பத் தாக்குக்கு உள்ளாகி இருப்பதாக ஊகிக்கலாம்   எவ்வாறு நீங்கள் வேறுபாட்டைக் கண்டுபிடிப்பீர்கள்  ??

முக்கிய குறிப்பு !:

முக்கிய குறிப்பு  ! வெப்பத்தின் மத்தியில் வேலை செய்பவர் உடனடியாக வேலையை நிறுத்த வேண்டிய சந்தர்ப்பங்கள்  தலைச்சுத்து  மனக்குழப்பம்   பலவீனம்   மயக்கம்   இருதயப் படபடப்பு அல்லது மூச்சு விட கஷ்டம்   வெப்பத்தினால் ஏற்படும் உடல் நலக்குறைவின் அறிகுறிகள் உங்களிடம்  அல்லது சக ஊழியர் அல்லது சக மாணவரிடம் காணப்பட்டால் உங்களுடைய மேலதிகாரி, ஆசிரியர் அல்லது அருகாமையில் இருப்பவரிடம் தெரிவியுங்கள்  

வெப்பத்தினால் ஏற்படக்கூடிய உடல்நலக் குறைவை தடுப்பதற்கு ஞாபகத்தில் வைத்து இருக்க வேண்டியவை :

வெப்பத்தினால் ஏற்படக்கூடிய உடல்நலக் குறைவை தடுப்பதற்கு ஞாபகத்தில் வைத்து இருக்க வேண்டியவை  அடிக்கடி நீர் அருந்துங்கள் வெப்பத்தினால் ஏற்படும் உடல்நலக் குறைவின் அறிகுறிகளை அறிந்து இருப்பதுடன் அவற்றை பாரதூரமாகவும் எடுத்துக் கொள்ளுங்கள்  அதிகமாக வியர்க்கும் போது இளநீர், மிகச் சிறிதளவு உப்பு சேர்க்கப்பட்ட தேசிக்காய் ரசம் அல்லது சம அழுத்தமுள்ள விளையாட்டுத் திரவம் ( isotonic sports drink ) ஆகியவற்றை அருந்தலாம் மதுபானம், caffeine சேர்க்கப்பட்ட காப்பி மற்றும் கோலா வகைப் பானங்கள், வயிறு முட்ட உணவருந்துதல் ஆகியன வேலை நேரத்திலும் வேலைக்கு முன்னரும் தவிர்க்கப் படவேண்டும்  சாதுரியமாக வெப்பத் தாக்கதை குறைக்கும் வகையில் வேலை செய்யுங்கள்  பழக்கம் இல்லாதவர்கள் வெப்பச் சூழ்நிலைக்கு உடலை சிறிதுசிறிதாக பழக்கப் படுத்திக் கொள்ளவேண்டும்  காலநிலைக்கு பொருத்தமான ஆடை  வேலை செய்யும்போது சீரான இடைவெளியில் ஓய்வு எடுக்கும் நேரம்  சக ஊழியர் மாணவர்களை கவனமாக அவதானியுங்கள்  

Slide35:

நன்றி 

authorStream Live Help